Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Thursday, January 27, 2011

ஆசிரியத்துவத்தின் வகிபங்கும், மாணவர்களின் உள நெருக்கீடும்If you have a lemon, Make a Lemonade” என்பது மொழி. அதாவது தங்களிடம் ஓர் எழுமிச்சம் பழம் இருப்பினும் அதிலிருந்து எழுமிச்சம்சாறு செய்யலாம் எனும் நம்பிக்கை, அவ்வாறு தொடங்கினால்தான் பின்னர் தோடம்பழச்சாறு பற்றியோ அல்லது பெரிய தொழிற்சாலை பற்றியோ சிந்திக்க முடியும் என்பது பொருள்.
இவ்வாறுதான் ஒவ்வொரு மாணவனின் கற்றவும் நம்பிக்கை சார்ந்தே அடித்தளமிடப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய நிலையில் பாடசாலைகள், பத்திரிகைகள், கல்வியியல் அமைப்புக்கள், நிறுவனங்கள், சஞ்சிகைகள், போன்றன இதற்கான உந்துதல்களையும், உறுதுனையையும், பலமான நம்பிக்கையினையும் வழங்குவதில் பாரிய முயற்சி காட்டி வருகின்றது.
உலக மாற்றங்களுக்கு ஏற்ப இயைந்து கொடுக்கக் கூடிய வகையில் கற்றல் - கற்பித்தலில் புதுப்புது திறன் விருத்திகள், கல்வியியல் முறையில் விசேட சீர்திருத்தங்கள் போன்றன உள்வாங்கப்பட்டு இயக்கத்திறன், ஆக்கத்திறன் அதிகரித்து வருகின்றமை நோக்கியறியத்தக்கது.
“இன்றைய சிறார்கள் நாளைய தலைமைகள்” என்ற ரீதியில் மாணவர் சமூதாயத்திளை கல்வி அறிவில் முன்னேற்றுதல் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்குதல், அவர்களை முழு மனிதனாக்குதல் பணிகளில் பாடசாலையானது மிகப் பெரிய வகியங்கினைக் காத்து வருகின்றது.
ஒருவனை மனிதப்பண்பாடுடையவனாக மாற்றும் வகையில் கல்வியானது “குழந்தைகளிடம் இருந்து முழு மனிதனை வெளிக் கொணர்ந்து திறன் விருத்தியின் ஆளுமையை வளர்க்கின்றது. இங்கு உடல், உள, அறிவு, ஆண்மா என்பன ஒன்றினைந்து விருத்தி செய்யப்பட்டு வெற்றி கொள்ளப்படுகின்றது”. இதனால் கல்வி சிறந்த உளத்துணையுடையதாகவும் காணப்பட வேண்டியுள்ளது.

ஆசிரியர்களின் வகிபங்கு : சமூக நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படும் பாடசாலையின் வகுப்பறையிலிருந்தே நற்பிறஜைகள் என்ற அந்தஸ்தினையுடையவர்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர் வகுப்பறையில் ஆசிரியர் எவ்வாறு கற்றல் கற்பித்தலினை முன்னெடுக்கின்றனர் என்பதிலேயே ஆசிரியரின் வெற்றி தங்கியுள்ளது.
“குழந்தையானது கேள்வி கேற்கும் போதுதான் மனிதன் தனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கின்றது என்பதனை உணருகின்றனர்” என Michael Block Fort என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது இன்றைய நிலையில் பிள்ளைகள் பல்வேறு கோணங்களில் திறன்படைத்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு ஏற்றவகையில் முகங்கொடுக்கக் கூடியவர்களாக ஆசிரியர் சமூகம் தயார் படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை வெற்றி கொள்வது என்பது ஓர் இலகுவான காரியம் எனக்கூறிவிட முடியாதுள்ளது. ஓவ்வொருவரின் சிந்தனையும், செயற்பாடும், தொனியும் வெவ்வேறு குடும்பச் சூழலிலிருந்து வரும் வகையில் பரந்து பட்டதாகக் காணப்படுகின்றது.
அதாவது தரம் 1ற்குள் நுழையும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் காலடி எடுத்துவைக்கின்றனர். சிலமாணவர்கள் இயல்பூக்கம் கொண்டவர்களாகவும், சிலர் சாதாரன நிலையில் உள்ளவராகவும், மேலும் சிலர் கூச்ச சுபாவம், அதீத அமைதி, குரும்புத்தனம், அழுகை போன்ற பல மனப்பாங்குடன் காணப்படுவர். இந்நிலையில் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவரவர் நடத்தைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அணுகி சமநிலைப்படுத்தும் திறன் ஆசிரியரிலேயே தங்கியுள்ளது.
இன்றைய நிலையில் கல்வியில் அறிவிலி, முட்டாள், என்ற சொல் வாசகம் அகற்றப்பட்டு விட்டது அதாவது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகையில் விகித அடிப்படையில் திறமை கொண்டவர்களாகக் காணப்படுவர். அவ்வகையில் சீறிய வழியில் வளர்த்தெடுப்பது ஆசிரியத்துவத்தின் முக்கியபணியாகவுள்ளது. மாணவர்களின் நிலை கருதி அவர்கள் 3 நிலைகளாக வகைபடுத்தப்படுகின்றனர்.
1. மீதிறன் கொண்டமாணவன் (Gifted Child)
2. சாதாரனமானவன் (Normal Child)
3. மெல்லக்கற்கும் மாணவன் (Back Ward Child)
வகுப்பறையில் இவ் 3 விதமான மாணவர்களும் காணப்படுவர் இம் மூவினருக்கும் வெவ்வேறுவிதமான கற்பித்தல் அணுகுமுறை என்பது வித்தியாசப்பட்டுக் காணப்படவேண்டும்.
எடுத்துக்காட்டாக – ஆசிரியர் ஓர் பாடத்தினை விளங்கப்படுத்திய பின்னர் அது தொடர்பான பயிற்சியோ, விளக்கமோ கரும்பலகையில் எழுதி முடிக்கும் முன்னே மீதிறன் கொண்ட மாணவன் எழுதிமுடித்துவிடுகின்றான். ஆனால் அதே வகுப்பறையிலுள்ள மெல்லக் கற்கும் மாணவன் பாடம் முடிவடைந்த வேளையிலும் கூட ஒரு சொல்லோடு மாத்திரமே இருந்து விடும் நிலையும் காணப்படுகின்றது. இங்கு இவ்விரு வகுப்பாரும் விசேட தேவையுடைய மாணவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே இவ்விரு சாராரினதும் நிலைகுறித்து கவனித்துச் செயற்படுவதென்பது ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. இது சீர் செய்யப்படாத விடத்தே முறைசாராக் கல்வி திட்டம் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரினாலேயே வினைத்திறன, விளைதிறன் கொண்ட சிறந்த சூழல் உருவாக்கப்படுகின்றது அதேபோன்று மாணவர் மனதிலும் ஆசிரியர் தம்மீது அக்கரை கொண்டுள்ளார். தம் எதிர்கால வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பார் என்ற நம்பிக்கையும் உணர்வும் காணப்பட வேண்டும். இதனாலேயே “ஆசிரியர்கள் ஞான விளக்குகளாவர்” என்ற கருத்தினை சோக்ரடிஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது ஆசிரியர்களானவர் வெறுமனே போதிப்பவர்களாக அன்றி சகல துறைகளிலும் நின்று கற்றல் கற்பித்தல் நிபுனத்துவத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய நிலையில் கல்வி உளவியல் என்பதும் மாணவர்களின் எதிர்காலத்தினை சீராக்கும் வகையில் பல நுட்ப முறைகளை கையாளுமாறு வலியுறுத்துகின்றது அதாவது மாணவர் சமூதாயத்திற்கு முன்மாதிரியாகவும், திறமையான அணுகுமுறைகளையும் கைக்கொண்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
“ஆசிரியரானவர் உலகை விமர்சனம் செய்பவர் மட்டுமல்லாது குறைகளிலிருந்து தீர்வு வழங்கி சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள்”
வெவ்வேறு நிலையினையுடைய மாணவர்களை இணங்கண்டு கொள்வதற்காக பல நுட்ப முறையினைக் கைக்கொள்ள வேண்டும் என கல்வி உளவியல் வெளியிட்டுள்ளது.
1. அவதானிப்பு முறை
2. அகநோக்கு முறை
3. வினாக் கொத்து மறை
4. தனியாள் முறை
5. புள்ளிவிபரவியல் முறை
போன்ற முறைகளை சுட்டிக்காட்டுகின்றது இவ் அவதானிப்புத் தொடர்பு மூலம் மாணவர்களை இலக்கு (Goal) நோக்கி வடிவமைக்கமுடியும் ஒரு பெற்றோரிலும் பார்க்க ஆசிரியரினாலேயே ஒரு மாணவனின் உளநிலையை கணிப்பிட்டுக் கொள்ள முடிகின்றது மேலும் ஆசிரிய மாணவ இடைத் தொடர்பு (Intereaction) என்பது மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இன்று கற்பித்தல் பணியினை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு பல ஆய்வுகளும், புதுப்புது சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு கற்றல் கற்பித்தல் புத்தாக்கம் பெறுகின்றன இந்த வகையில் ஆசிரியத்துவம் கொண்டிருக்க வேண்டிய சிறப்புத் தேர்ச்சி, நற்பண்பு பற்றி கொலம்பிய பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வின் முடிவானது வெறுமனே பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிறந்த ஆசிரியர்களாகக் கொள்ளப்படமாட்டார்கள் மாறாக பின்வரும் அனைத்துப் பண்புகளையும் இணைத்திருக்கும் வகையிலேயே சிறந்த ஆசானாக மாறும் வகிபாகத் திணையும் பெறமுடியும்.
1. பரந்த அறிவு
2. ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன்
3. முகமலர்ச்சி
4. கவர்ச்சிகரமான குரல்
5. நல்லபிமானம்
6. நடுநிலைமை
7. சமூக இசைவு
8. தன்னம்பிக்கை
9. பல்துறை நிபுனத்துவம்
10. சுறுசுறுப்பு
11. நேரத்திற்கு தொழில் புரிதல்
12. சரியான முடிவெடுத்தல்
13. வசீகரிக்கும் தன்மை
14. நலன் விரும்பும் மனப்பான்மை
15. தன்னலமற்ற சேவை
16. ஒத்துழைப்பு
17. மன தைரியம்
18. தலைமைத்துவம்
இவ்வாறு பல நற்பண்புகள் இணைந்தே கட்டமைக்கப்பட்டதாக ஆசிரியத்துவம் காணப்படவேண்டும் என்கிறது இவ்வாறு ஆசிரியரின் பணிகளைத் தெளிவுபடுத்துவதைப் போன்று பாடசாலைக் கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இன்றைய உலக மாற்றங்களுக்கு ஏற்ப எதிர் கொள்ளக் கூடிய வகையில் 2007ம் ஆண்டு பாடவிதான மறுசீரமைப்பில் இலங்கையின் முறைசார் பாடசாலைகளில் 5E என்ற மாதிரி முறையின் அறிமுகமும் முக்கியமானது அதாவது இதுவரை காலமும் இருந்த பாடசாலைக் கலைத்திட்டங்களால் மாணவர்களின் ஆற்றல் விருத்தி செய்யப்படவில்லை. என்பதிக்கினங்க இவ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 5நு என்பதானது பின்வரும் வகையில் அமைந்துள்ளது.
1. ஈடுபடுத்தல் (Engagement)
2. கண்டறிதல் (Exploration)
3. விளக்கமளித்தல் (Expiation)
4. விரிவாக்கம் (Elaboration)
5. மதிப்பீடு (Evolution)
ஆசிரியர்களின் நிலை மாற்று வகிபங்கினை ஏற்றுச் செயற்பட வைப்பதானது இதன் நோக்கமாகும். தகவல்களை முன்னின்று ஒப்பிப்பவராக இல்லாமல் பல்வேறு பாத்திரங்களில் நின்று மாணவர்களை வழிப்படுத்துவதாகும் வசதியளிப்பவர், மாற்றுபவர், முகாமையாளர், ஆலோசகர், ஆய்வாரள், மாற்று முகவர், வளவாளர், உதவியளிப்பவர் பொன்ற பல வகிபங்கினைப் பெற்றுச் செயற்பட தொழிற்பட வைப்பதாகும்.
இதனால் மாணவ மனப்பாங்கு அறிவு திறன், போன்றன மூலைச்சலவை செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகின்றன இவ்வாறு கற்றல் கற்பித்தலில் அக்கரை கொண்டவர்களாகக் காணப்படும் ஆசிரியர்களுக்கு மற்றும்மொரு பாரிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கின்றது. இன்றைய கல்வியியல் நிலையில் மாணவர்களின் நடத்தைச் சீராக்கம் என்பது முக்கியம் பெறும் ஒன்றாகக்காணப்படுகின்றது. ஆயினும் இன்றைய நிலையில் ஒழுக்க விழும்மியங்கள் கடைப்பிடினக்கப்பட்டு வருகின்றனவா என்பது பெரும் குறையாகவே உள்ளது இதற்ற காரணம் இன்றைய கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மாணவன் சமூகமயமாக்கப்பட்ட விதம் மற்றும் குடும்பத்தின் சிக்கல் நிலை போன்றவாக இருக்க முடியுமாக அறியப்படுகின்றது ஆயினும் இம் நடத்தைச்சீராக்கம் பற்றி ஆய்வுக்க உற்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பல மொழியானது குறிப்பிடத்தக்கது என்னதான் கல்வியில் சிறப்பிடம் பொற்ற ஒருவராகவோ அல்லது ஆலுமையுடையவராக இருப்பினும் ஓழக்கவிலுமியம் கொண்ட ஒருவராலேயே வெற்றி கொள்ளப்படுகிறது என்பது நிதர்சனமானது இதனாலேயே அவரின் சுய கௌரவம் பாதுகாக்கப்படுகின்றது இந்த வகையில் நடத்தை சீராக்கம் ஒக்க விழுமியம் பேனல் போன்றன வகுப்பறையில் இருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டிய போறுப்பு ஆசிரியத்துவத்திற்கு இருக்கின்றது.

மாணவர்களின் உள நெருக்கீடு : இன்றைய நவீன கல்வியியல் முறையானது மாணவர்களுக்கு என விசேட செயற்திட்டங்கள் நோக்கியதான கற்றல் கற்பித்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடையக் கூடிய ஓர் நிலையினை எட்டியுள்ளோம். இன்றைய நிலையில் பன்திறன் கொண்ட மாணவர் சமூதாயம் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பதில் வெளிப்பாடுகள் சான்றுபகிர்கின்றன பெருபெறுகள் அடைவுமட்டச் சான்றுதல்கள் பரிசில்கள் போன்றன இதனை வெளிக்காட்டுகின்றன
ஆயினும் இன்றைய நிலையில் உள நெருக்கீட்டிற்கும் சுமைகளுக்கும் ஆளாகக் கூடியவர்களாகக் காணப்பட்டு வருகின்றன மகிழ்சி கரமாண கற்றல் விரும்பக்கற்றல் என்பது குறைந்த நிலையிலேயே உள்ளது இதற்கு அதிகூடிய காரணம் பெற்றோர்களினாலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.
ஆரம்பக் கல்வியில் இருந்து எழுதும் திறன், படிக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன், பேசும் திறன் போன்ற நான்கு திறன்களும் முறைமையடையும் போதே ஒரு மாணவனானவன் அம் மொழியில் புலைமை பெற முடியும் ஒரு பிள்ளையின் சொற்கள் கூடிய விதத்தில் 2000 சொற்களாகும் வரை வாக்கியங்களை சரிவர பொருள்விளங்கி வாசிக்க முடியாது இதற்காகப் பொற்றோர் தன் பிள்ளை முன்பள்ளிக்கு சென்ற உடனே வாசிப்புப் பெற்று விடவேண்டும் என்பதில் ஐயம் கொள்வது நியாயம் இல்லை மாறாக முன்பள்ளி என்பது இயைந்து மற்றவ்ரகளோடு (சகபாடிகளோடு) இடைவினை கொள்வதும் பேச்சுத்திறனை அதிகரிக்கும் ஓர் களமாகக்காணப்படுகிறது ஒரு பிள்ளை வாசிப்பு திறனை அதிகரிப்பதிலும் முன்னமே பேச்சுத்திறன் மேலாக்கம் பெற வேண்டும் தன்னுடைய பிள்ளைகள் வேகமாக, அவசரமாக முன்னேற வேண்டும் என்பதற்காக “குருவித்தலையில் பணங்காயைச் சமத்துவது போன்று” தங்கள் பிள்ளைகளின் மனதில் சுமைகளை பரப்பி விடுகின்றனர். அவரவர் கொள்தகுதிறன் (Capcity) கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக – தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் தனது பிள்ளை சித்தி எய்த வேண்டும் என்பதற்காக தரம் - 3லிருந்து விசேட பாடத்திட்டம் என்றும் மாணவர்களை பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது உதாரனம் காட்டி அவர்களின் பிள்ளை சித்திபெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தியெய்த வேண்டும் அப்படியென்றால் தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது. உதாரணம் காட்டி அவர்களின் பிள்ளை சித்தி பெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தி எய்த வேண்டும் அப்படி என்றால்தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் அதிகரித்து வருவதான அறியமுடிகின்றது.
இவ்வாறு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமையும் நிலையிலும் கூட அவர்களின் வயதிற்கேற்ற கல்வியின் வளர்ச்சியினைப் பெறுவதற்கும் அவர்களின் உளவிரத்தியினை மேற்கொள்வதற்கும் ஒவ்வோர் பெற்றோரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய தேவையுடையவர்களாக இன்றைய மாணவர்கள் காணப்படுகின்றனர்.
உளவிருத்தியினை ஏற்படுத்தும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவம் இன்று பெற்றோர்களால் 2ம் தரமாகவே நோக்கப்படுகின்றது. மாணவர்களின் சிந்தனை விருத்தி நினைவாற்றலினை அதிகரிக்கும் ஓர் முக்கிய நற்பயன் ஆன்மீகக் கல்விக்கு உண்டு என்பதையும் அது உள அமைதியினை ஏற்படுத்துகின்றது என்பதனையும் பெற்றோர்கள் சிந்திக்கத் தவருகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பிள்ளையின் மனதினைக் கணமாக்கும் பெற்றோர்கள் குழந்தையின் உள விரத்தி என்பது குழந்தை முதலே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையை உணர வேண்டும்.
உதாரணத்திற்கு ஓர் மாணவனை அனுகும் சமயம் தனது பெற்றோர் என்பவர் ஓர் ஓய்வு என்ற நிலையினை தங்களுக்குத் தரத்தவருகின்றனர் என்ற கூற்று தரப்படும் நிலையினை அறியமுடியும். இவ்வாறு இன்று உளரீதியான தாக்கம் மிருந்த நிலையில் உள்ளது.
இவ்வாறு ஆர்வம் காட்டும் பொற்றோர் பிட்பட்ட காலங்களின் பிள்ளைகள் மீதான கண்காணிப்பினையும் கரிசனையினையும் காட்டத்தவருகின்றனர். ஆனால் பெற்றோர் தனது பிள்ளையில் அனைத்து வயதுப்பருவங்களிலும் அக்கரை காட்டக் கூடியவர்களாகவும் ஊக்கமூட்டக் கூடியவர்களாகவும் காணப்பட வேண்டும். இதனாலேயே “பெற்றோர்கள் பிள்ளைகளின் நிரந்தர ஆசிரியர்கள் அவர்களுக்கு ஓய்வு என்பது கிடையவே கிடையாது” என்ற கூற்று நினைவுறுத்தப்படுகின்றது.
அத்தோடு ஓர் பிள்ளையின் குடும்பச் சூழலும் உளநெருக்கீடாக அமைவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது இன்றைய நிலையில் குழந்தையானது புத்திமதிகளைக் கேட்டு நடப்பதை விட பெற்றோர்களின் நடத்தைகளைச் சுலபமாக பின்பற்றக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் தாய் தந்தையர்களுக்கிடையிலான பழக்கவழக்கங்கள் பிள்ளையில் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. திய நடத்தைகளும் அமைதியும் அற்ற குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் உளநெருக்கீட்டிற்கு உற்பட்டவர்களாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் பெற்றோர் பிள்ளையின் மீது திணிக்கும் செயல்ப்பண்பும் அவர்களின் உள நெருக்கடியினைத் தூண்டுவதாகவும் உள்ளது. அத்தோடு மாணவர்கள் சகபாடிகள் சம வயதுக்குழுக்கள் விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றினூடாகவும் உள நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுவதனை இன்று அவதானிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

இவ்வாறு பெற்றோர்கள் சமவயதுக்குழுக்கள் சூழல் போன்றவற்றினால் உள நெருக்கீட்டிற்குள்ளாகும் அதே சமயம் ஆசிரியச் சமூகத்தினாலும் உளநெருக்கீடு மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. அதாவது பின்தங்கிய பிரதேச மற்றும் எல்லைப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியரின் கவலயீனமும் அப் பாடசாலை மாணவர்களின் உள்ளங்களில் ஓர் விருத்தியினைப் பெறமுடியாத நிலையில் உள்ளது. அதாவது அதிக விடுமுறை மற்றும் நேரத்திற்கு தொழில் புரியாமை குறைந்த நேரக்கற்கை போன்றனவும் மாணவர்களில் பிரதிபலிக்கக் கூடியதே. மேலும் தொடரான விடுமுறையடுத்து பரீட்சைகாலங்களில் மேலும் கற்பித்தலைக் கணமாக்கும் வேளையில் மாணவனினால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் போன்றனவும் காணப்படக்கூடியதாகவே உள்ளது. அதாவது ஒரு நிருவாகத்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒரு நாள் விடுமுறை என்றால் அவர் தனது பணியினை அடுத்தநாள் தொடரக் கூடியதாகவிருக்கும் ஆனால் ஓர் கற்றல் நாள் என்பது அவ்வாற நிலையில் அல்ல. என்பது சிந்தனைக் குறியதே.
இன்யை சூழலில் புதிய புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களுக்காக அறிமுகம் பெறும் வேளையிலும் அவை அனைத்தும் சகலரினாலும் ஏற்கப்பட்டு பன் விருத்தி வகிபங்கு மேற்கொள்ளப்பட வேண்டியதும். உள வளர்ச்சி மேன்மை பெறுவதும் தேவையை நோக்கியதே இந்த வகையில் மாணவர்களும் - ஆசிரியர்களும், மாணவர்களும் - பெற்றோர்களும், பெற்றோர்களும் - ஆசிரியர்களும் என்ற நிலையில் காணப்படும் இன்றைய கல்வியியல் முறையானது.
1. மாணவர்களின் தலைமை தாங்கும் பண்பு
2. ஒத்துழைப்பு
3. நேரிய கற்றல்
4. விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு
5. கீழ்ப்படிதல்
6. கட்டளைகளை ஏற்று நடத்தல்
7. சமநிலைத் தன்மை பேனல்
8. தோல்வியை ஏற்றுக் கொள்ளல்
9. ஒழுக்க வழுமியங்களில் ஈடுபடல்
10. இலக்குகளுக்கு வளப்படல்
11. ஊக்கமளிக்கப்பட்டிருத்தல்
போன்ற பண்பாட்டு பழக்கவழக்கங்களும் மாணவர் சமுதாயத்தில் விருத்தி செய்யப்படுகின்றது. இந்த வகையில் அறியாமை எனும் இருளை நீக்கி அறிவு எனும் ஒளியைப் பரப்புவது ஆசிரியரின் பிரதான கடமையாகின்றது. இவ்வாறு பல்வேறு கடமைகளைக் கொண்ட ஆசிரியர் சமுதாயம் பல்வேறு அறிவுப் பிரவாகத்தைக் கொண்டவர்களாக விளங்கப்பட வேண்டும் சமகால சூழ்நிலைக்கேற்ப பல்வேறு திறன்களையும் சுயநம்பிக்கையினையும் சுயமதிப்பீட்டினையும் பெற்றுக் கொள்ள தம்மைத் தாமே வளப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையுடையவராக ஆசிரியத்துவம் காணப்படுகின்றது. அத்தோடு மாணவர்களின் செயலாக்கத்தினை வளப்படுத்தும் வகையில் எதிர்பார்க்கப்படுவது காணக்கூடியதே.
ஆத்தோடு பெற்றோரும் தங்களது பிள்ளைகளில் சகல வகையிலும் வகனம் செலுத்தக் கூடியவர்களாகக் காணப்பட வேண்டும். ஓர் உயர்ந்த கட்டத்திற்கு அத்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல ஒரு மனிதனின் குழந்தைப்பருவமும் அவனின் குடும்பச் சூழலும் பாரிய பங்களிப்பினை கொண்டுள்ளது. அத்தோடு குழந்தையின் (மாணவனின்) அமைதியான சூழல், உடல், உள, அறிவு, ஆன்மா விருத்தி கட்டுமானம் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக மாற்றுவதில் பெற்றோரின் பங்கு முழுக்க முழுக்க அமைந்து விடுகின்றது. எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகள் தம்மிலும் பிறரிலும் கொண்டுள்ள எதிர்பார்ப்பு இழக்கப்படும் போது உள நெருக்கீட்டினையும், மன உடைவு, மன அழுத்தம், பற்றற்ற நிலை போன்ற பண்பினை வளர்த்தெடுக்கின்றனர்.
இந்த வகையில் ஆசிரியர் பெற்றோர் மாணவனின் பன்விருத்தியில் பங்கு பற்றல் சிறப்பிடம் பெறவேண்டிய வகையில் செயற்படுவது சிறந்த எதிர்கால. சமுதாயப் பரம்பலுக்கு உருதுனையாக அமையக் கூடியவர்கள். எனவே கூழந்தைகளையும் மாணவர்களையும் நேரடியாக அணுகக் கூடியவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமேயாகும்.
“எனவே ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்ற நியூட்டனின் விதி இன்று மாணவர்களின் செயற்பாடுகளுக்கு ஆசிரியர் சமூகமும் பெற்றோர்களும் தாக்கத்தின் மறுதாக்கமாக அமைகின்றது என்பது உண்மையான ஒன்றேயாகும்.

என்.பீ.முகம்மது றிபாஸ்


Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...