Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Friday, April 22, 2011

திறமைசாலியாக வளர்வது எப்படி?“எண்ணியவன் உறங்களாம்
எண்ணங்கள் உறங்குவதில்லை” -வேதாத்திரி மகிரிஷி
மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்ன?
ஏழைக்கு என்னென்ன தேவைகள்?
வாழ்க்கைக்கான வசதிகள் இருந்தும் ஏன் சிலருக்கு மனதிருப்தி இல்லை?
மனத்தின் ஏக்கங்கள் என்னென்ன?
பணம் நிறைய கிடைத்தாலும் சில வேலைகளை விரும்புவதில்லை ஏன்?
இக்கேள்விகளுக்கான பதில்களுக்கு வருமுன் ஒரு சரித்திர நிகழ்வைப் பார்ப்போம்.
சரித்திர நிகழ்வு :
அதிகாலை செய்தித் தாளைப் புரட்டினார் அந்த மாபெரும் விஞ்ஞானி. “மரண வியாபாரி மரணம்” என்று தலைப் பிட்டு அதன்கீழே அவருடைய போட்டோவைப் பார்த்தார். மனதில் அதிர்ச்சி.
நான் இறந்துவிட்டால் இப்படித்தான் உலகம் என்னைப் பற்றி பேசுமா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. இனி தன் பெயரை எப்படி பேச வேண்டும் என்ற புதிய முடிவை எடுத்தார். இன்றும் உலகத்திலேயே உயர்ந்த பரிசான நோபல்பரிசை உருவாக்கிய விஞ்ஞானி ஆல்பர்ட் நோபல்தான் அவர்.
வேறொருவர் இறந்தபோது இவர் என எண்ணி தவறான மரண செய்தியை செய்தித்தாள் வெளி யிட்டதால் வந்த மனத்திருப்பம்.
வெடி மருந்ததைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் சாதனைப் படைத்தார். அதன் மறுபக்கம், வெடிமருந்தால் எண்ணற்றகொலைகள் ஆல்பர்ட் நோபலின் உடன்பிறந்த சகோதரும் அவ்வெடிக்குப் பலி.
அதற்கு மனதில் நொந்துக் கொண்டிருந்த ஆல்பர்ட் நோபலுக்கு ‘மரணவியாபாரி மரணம்’ என்ற பட்டத்தைப் பார்த்ததும் மனதில்தோன்றிய இறுதி லட்சிய தேவைக்காக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் தானமாக வழங்கி “இந்த உலகத்தின் அமைதி, வளர்ச்சிக் காக யார் யார் பயன் படுகிறார் களோ அவர்களுக்கு நோபல் பரிசு வழங்குங்கள்” என்று அறிவித்தார்.
நோபல் பரிசு விஞ்ஞானியின் இறுதி லட்சியம், ஏழைகளின் தேவைகள், மனதிருப்தியின்மை, மனிதனின் ஏக்கங்கள், போன்றவற்றை மனயியலின் அடிப்படையில் பொருளாதார நிபுணர் மாஸ்லோ விளக்குகிறார்.
மாஸ்லோ விதிகள்:
வயிற்றுப்பசி தீராத மனிதனுக்கு மூன்று வேளை சாப்பாடு என்ற தேவை.
2. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை என்று அடைந்தவுடன் இதெல்லாம் நிலையா என்பதற்கு தேவையான உத்திரவாதம் என்ற பாதுகாப்பு தேவை.
3. அப்படியே பாதுகாப்பு தேவை நிறைவேறிவிட்டாலும் அடுத்ததாக நமது அன்பை, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்பவர் யார் என்ற ஏக்கத்தில் பிறக்கும் அன்பு தேவை.
4. உறவுகள், நண்பர்கள் என வளர்ந்து அன்பு வட்டம் வந்துவிட்டால் அதன் பின் சமுதாயத்தில் தான் உயர்ந்தவன் என்று மற்றவர் பாராட்ட வேண்டும் என்ற மரியாதை தேவை.
5. உயர்ந்த அந்தஸ்துடன் மரியாதை களுடன் வாழ்கின்ற மனிதனுக்கும் தன்னுடைய தனித்தன்மை என்ன? தன்னைப் பற்றி இந்த உலகம் எப்படி பேசவேண்டும் என்ற தனித்தன்மை தேவை.
இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் உள் உணர்வுகளைத் தூண்டி அதன் விளைவாக அவன்தன் வாழ்வின் இலட்சியத்தை அடைய உதவுவதுதான் மேலாண்மையின் அடிப்படை.
ஒரு தேவை நிறை வேறிய பின்னர் அடுத்த தேவையை நாடுவதுதான் மனித இயல்பு. அந்த தேவைகளின் அடிப்படையில் ஒரு மனிதனுக்குத் தகுந்த இலக்கைக் கொடுத்தால் அவன் மேலும் உற்சாகமாக செயல்படுவான்.
அதன்மூலம் அவன் வாழ்வும் உயரும். அந்த நிர்வாகமும் வளரும்.
இதைத்தான் திருவள்ளுவர் செயலின் தன்மை, செய்யும்முறை, செய்பவரின் திறன் இவற்றை இணைத்து ஆராய்ந்து எந்த செயலுக்கு யார் பொருத்தம் என்பதை அறிந்து அவரிடம் விடுவதே சிறந்த மேலாண்மை என்றார்.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்”
– திருக்குறள்.

Post Comment

மன அழுத்தத்தை மாற்றுவோம்இன்றைய நவீன இயந்திர உலகில், மன அழுத்தம் என்று சொல்லும் STRESS தவிர்க்க முடியாதது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது நமக்கு வருகிறது. உடல் மற்றும் மனநிலைகளைப் பாதித்து இரத்த அழுத்தம், ஒரு பக்கத் தலைவலி, ஆஸ்துமா மற்றும் முதுகுவலி போன்ற உடல் வியாதிகளும், கவலை, படபடப்பு போன்ற மன வியாதிகளும் இது காரணமாக உண்டாகிறது. எனவே, எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை விரிவாய் சிந்திப்போம்.
STRESS மன அழுத்தம்
எந்த ஒரு பிரச்னையும், அது பிரச்சனை என்று தெரிந்து கொள்ளும்போது தான் பிரச்னையாகிறது. தீவிரமான எதிர்மறை உணர்ச்சிகள் (NEGATIVE EMOTIONS) காலப்போக்கில் ஒருவரது மனநலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
காரணம் : எதிர்மறை அறிவு (NEGATIVE PERCEPTION) எதிர்மறையான எண்ணங்கள், எதிர்மறையான நம்பிக்கைகள்.
பலர் தம் நேரத்தை, சக்தியை கடந்த கால நிகழ்வுகளை அசைப்போட்டும், எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்பட்டும் வீணாக்குவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் மகிழ்வாக அல்லது வருத்தமாக வாழ்வது அவர் கையில்தான் உள்ளது.
விளக்கம் : நாமோ அல்லது நமது உடல் உறுப்புக்களோ ஒரு தீர்வுக்குரிய பிரச்னையை எதிர்கொள்ள நேரும்போது நமது உடலும் மனமும் மாற்றம் பெற்று வரும் விளைவுதான் மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. அப்பிரச்சனைகளைச் சரியன முறையில் கையாண்டு சமாளிக்க முடியாவிட்டால் மன அழுத்தம் உண்டாகிறது. (STRESS is a by product of Poor or Inadequate coping).
மன அழுத்தமும் சமாளித்தலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், ஒன்றையொன்று சார்ந்தும் உள்ளன. நேரான மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் தீர்வுக்குரிய பிரச்சனைகளால் மன அழுத்தம் உண்டாகிறது.
வகைகள் : (types) மன அழுத்தம் இரண்டு வகைப்படும். 1. EUSTRESS மகிழ்வுதரும் மன அழுத்தம். உதாரணம்: திருமணச் சூழல்
2. DISTRESS : துன்பம் தரும் மன அழுத்தம. உதாரணம் : நெருங்கியவர் மரணம்.
மன அழுத்தத்திற்கான காரணங்கள்
1. ஏமாற்றம் (FRUSTRATION)
குறிப்பிட்ட இலக்கை நோக்கிய செயல்பாட்டுக்கு உண்டாகும் தடைகள், அதன் தொடர்ச்சியாக வரும் தோல்விகள், ஏமாற்றங்கள் மன அழுத்தம் உண்டாக காரணங்களாகின்றன.
விளைவுகள் : பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் குழப்பத்துக்குள்ளாகி, தன்னால் முடியாது என எண்ணி தோற்றுப் போதல்.
உதாரணம் : அகம் : தனிமை உணர்வு, குற்ற உணர்வு, உடல் உறுப்புகள் ஊனம் அடைதல். புறம் : வேலை இழத்தல், நேசிப்பவர், நெருங்கியவர் நட்பை இழத்தல்.
2. முரண்பாடு (CONFLICTS)
ஒருவரது எதிர்ப்பு, கருத்து வேறுபாடு, உடன்படாமை அல்லது இரு கருத்து, உறுப்பு இவற்றிடையேயான சண்டை இவை தொடர் பானது முரண்பாடு.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேவைகள் அல்லது எண்ணங்கள் தொடரும்
போது இது உண்டாகும்.
இதன் தீர்வுக்குரிய வழிகளை மூன்று வகையாய் பிரிக்கலாம்.
முதல்வழி : (APPROACH, AVOIDANCE) நம் தேவையை நோக்கிய செயல்பாடு. நம் இலக்கு எதுவோ அதை நோக்கி செயல்படுவதுடன் அதை அடைய சிலவற்றை தவிர்க்கவும் வேண்டும். ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் சில சாதகமான அம்சங்களும், சில பாதகமான அம்சங்களும் (SOME “IVE & -IVE) உண்டு.
உதாரணம் : நடுத்தர வர்க்கத்திலுள்ள ஒருவர் பெரிய செல்வந்தராக எண்ணுதல். இவர் தனது தற்போதைய நிலையில் வாழ்ந்து கொண்டே, மனதில், இந்த நிலையை தவிர்த்து (AVOID) செயல்படுதல், அதாவது இப்போதைய நிலையை மறவாமல் செல்லவேண்டிய நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துதல்.
MIDDLE CLASS HIGH CLASS
2-ம் வழி : (DOUBLE APPROACH) இரண்டையும் பரிசீலித்து தேர்வு செய்துல்.
நலம் விரும்பும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளில், இரண்டையும் பரிசீலித்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது, அல்லது முதலில் எது அடுத்து எது எனத் தேர்வு செய்வது, ஓர் இரவில் இரு திரைப்படங்கள் பார்ப்பது, இது பிரச்னையெனில் ஒருவர் தமது நேரம், சக்தி இவற்றின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படுவது, ஏதாவது ஒன்றை பார்ப்பது, அல்லது ஒன்றை முதல் காட்சியிலும் மற்றதை
2-ம் காட்சியிலும் பார்ப்பது.
மூன்றாவது வழி : தொடரும்......

Post Comment

CongratulationsTAHNIAH TUAN PENGARAH PELAJARAN PERAK!
Warga Sekolah Jenis Kebangsaan Tamil Keruh
mengucapkan tahniah kepada Tuan Pengarah Pelajaran Perak,
En Mohd Rauhi b. Mohd Isa kerana menerima Darjah Dato' Paduka Mahkota Perak (DPMP)
yang membawa gelaran Dato' sempena Hari Keputeraan Ke-83,Duli Yang Maha Mulia Sultan Perak.
 Tahniah Dato'!

YBhg DATO' MOHD RAUHI B. MOHD ISA
D.P.M.P, P.M.P, K.M.N,A.M.P,P.P.T.


Post Comment

Tuesday, April 19, 2011

ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் பெங்கலான் ஹுலு சித்திராப் பௌர்ணமி திருவிழா.

கடந்த 17/04/2011 இல் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் பெங்கலான் ஹுலுவில்  சித்திராப் பௌர்ணமி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடியோக்களை காண கீழே பார்க்கவும்.
Post Comment

Friday, April 15, 2011

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
மகனே,
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு “இலட்சியம்” இல்லாவிட்டால் மனிதன், கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தர் கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார்.
மகத்தான செயல்கள் யாவும் முதலில் “முடியும்” என்ற நம்பிக்கையில் தொடங்கப் பட்டவைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ணபரமாத்மா கூறியதை நினைவில் கொள்.
உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள், உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சாதனைகள், அதனை அடைவதற்கு நீ செய்யும் முயற்சிகள், உனது ஆழமான எண்ணத்தின் தூண்டுகோல்கள், உன்னை வழிநடத்தும் மனத்தின் உற்சாகங்கள், உன் வாழ்வில் ஒளியேற்றும் உன்னதக் குறிக்கோள்கள், உனக்கு என்றும் மகுடம் சூட்டி மகிழும் மகோன்னத மனத்தின் இலட்சியங்கள்தான் உன்னை வழிகாட்டி அழைத்துச் செல்லும் வாழ்க்கையின் நங்கூரங்கள்.
“நெப்போலியன் ஹில்” கூறியதைப் போன்று நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை நமது மனதில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கான முயற்சியை உண்மையாகவே ஒரு மனதோடு செயலாக்க வேண்டும். ஒவ்வொன்றும் நாம் நினைத்தபடி நம்மை வந்தடைவதை நாம் காணலாம். நான் எதையும் “சாதிக்கும் ஆற்றல் பெற்றவன்” என்று தினசரி தன்னம்பிக்கையுடன் சொல்லிப்பார். தன்னம்பிக்கையுடன் சொல்லும் போது எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிப்போகும். “நம்மால் முடியும்” என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை நீ வெற்றிகரமாக சாதித்துவிடலாம்.
மகனே, ஒன்றை மட்டும் நினைவில் கொள். “முடியும்” என்ற நம்பிக்கையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்கி உற்சாகத்துடன் செய்தால் வெற்றி உறுதி உனக்கு.
முயன்றால் முன்னேறலாம். வாழ்க்கையில் நீ எதுவாக வேண்டும் என நினைக்கிறாய்? முதலில் உள்ளத்தில் அந்த எண்ணம் கருக்கொண்டு உருப்பெறச் செய். வாழ்க்கையில் எதற்காகவும் அஞ்சாதே. எதற்காகவும் கலங்காதே. எந்தச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அதற்கான ஆற்றல் உனக்கு உண்டு. அதனை உணர்ந்து செயல்படுத்து. ஆசைக்கு இடம் கொடுக்காதே. அறிவுக்கு இடம் கொடுத்து ஆலயவாசலைத் திறந்திடு.
நான் நன்றாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் பெரிதாகச் சாதிக்கப் போகிறேன் என்று எப்போதும் எண்ணியபடி இரு. இப்படி இருந்தால் யானை பலம் உனக்கு. ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் நீ எண்ணியபடி உயர்ந்த இலட்சியத்தை அடைந்துவிடுவாய். துணிச்சலான ஆரம்பம்தான் உன்னைத் தூண்டிவிடும் கிரியா ஊக்கி. “துணிவில்லாதவனின் வாணிபமும், பணிவில்லாதவனின் ஊழியமும் பயன்படாது” என்பதை மனதிலிருத்தி துணிவோடும், பணிவோடும் உன் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வை. உன்னை நிச்சயம் உலகம் பார்க்கும். “பயம் சாதிக்காததை நயம் சாதிக்கும்” என்பதை மறந்து விடாதே.
யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு “நம்பிக்கை” தான் எல்லா செயலுக்கும் அடிப்படை. “கெடு” நிர்ணயிக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்குள் இதனை நாம் அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் ஏற்பட்டால் தான் அது உன்னைப்பிடித்து உந்தித்தள்ளும். உன்னுடைய லட்சியத்தை நீ எட்டிப்பிடித்திடுவாய். “லட்சியம்” மட்டும் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.
மகனே, வாழத்துடிப்பவர்கள்தான் வாழ முடியும். வகையறிந்து வாழ்கிறவர்கள் தான் நீண்ட நாள் வாழ முடியும். “வாழ்வோம்” வாழ்ந்தே தீருவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டு. உலகம் உன்னை வியந்து

Post Comment

யார் இவர்கள்


உலகமெலாம் தமிழ் வளர்க்கும் எங்கள் ஊர் மாணவர்கள் - ஜேர்மனியில் சாதனை

எமது ஊரில் பிறந்து வளர்ந்த பெற்றோருக்கு, ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள்;
தமது தாய் மொழிக்கு வழங்கும் அதிஉயர் கௌரவம் ஜேர்மனி மாணவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மிகப் பெரிய பல்கலைக் கழகங்களில் முதன்மையான கேம்பிறிச் பல்கலைக் கழகம் நடாத்திய
க. பொ. த. உயர்தரத்திற்கான தமிழ் மொழி பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி அடைந்ததுடன் அவர்களுள்
எமது கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சிறப்புச் சித்திகள் பெற்றும் சித்தியெய்தியுள்ளனர்.
க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் எங்கள் ஊர் மாணவிகளான  செல்வி. தயாளினி தர்மராசா, செல்வி தர்மினி தர்மராசா ஆகியோர் 
சிறப்புச் சித்தி பெற்று பெற்றோருக்கும், தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்
வெளிநாடுகளிலும் தமது தாய் மொழிக்கு தனி மரியாதை வழங்கி பெருமைப் படுத்திய மாணவர்களை
வாழ்துகின்றோம், வணங்குகின்றோம், பெருமைப்படுகின்றோம்.

"வாழ்க வளர்க வையகம் போற்றும் வித்தகர்களாக"
நாம்தான் தமிழை வாழவைக்கவேண்டும்.
"தாய் மொழி தமிழ் எனும் போதினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே"

Post Comment

Thursday, April 14, 2011

கர வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்விக்ருதி ஆண்டு, 14.04.2011 அன்று நண்பகல் 01.02 மணிக்கு முடிவடைகிறது. "கர' வருடம், அன்றைய தினம் நண்பகல் 01.03 மணிக்கு உதயமாகிறது. கடக லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறக்கிறது.
இந்த "கர' ஆண்டில், சித்திரை மாதம், 20ஆம் தேதி (03.05.2011) அன்று, ராகு/கேது பகவான்கள் முறையே தனுசு, மிதுன ராசிகளிலிருந்து விருச்சிக, ரிஷப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அங்கே அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 15.01.2013 அன்று துலாம், மேஷ ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.
"கர' ஆண்டு, சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.05.2011) அன்று குரு பகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அங்கே அவர் ஓராண்டு காலம் சஞ்சரித்துவிட்டு 17.05.2012 அன்று ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
"கர' ஆண்டு, ஐப்பசி மாதம், 29ஆம் தேதி (15.11.2011) சனி பகவான், கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர் அங்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 02.11.2014 அன்று விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
பொதுவாக ராகு/ கேது பகவான்கள், தாங்கள் பெயர்ச்சி ஆவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவும், குரு பகவான் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவும் தங்களின் அடுத்த பெயர்ச்சியின் பலன்களைக் கொடுப்பார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு "கர' வருடம் முதல் நாளிலிருந்தே ராகு/கேது பகவான்கள், குரு பகவான் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தையும் கணக்கில் கொண்டு "கர' வருட பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

Post Comment

Monday, April 11, 2011

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2011


குரோ தமிழ்ப் பள்ளியை சார்ந்த நாங்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இப்புத்தாண்டை முன்னிட்டு 14.04.2011 அன்று பள்ளி விடுமுறையாகும். பள்ளி மீண்டும் 15.04.2011ல் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி

Post Comment

Sunday, April 10, 2011

12 Tips For Development Of A TeacherA good Headmaster helps with the teachers in their professional problems and arrange professional development program for teacher. He or she gives priority to the needs of teacher for effective teaching. Different ways through which a headmaster could help a teacher in their professional growth and development:
· Teachers need continuous training and awareness about new ways of teaching
· Identification and Development of the skills of a teacher
· Enhance the experience of teacher through teacher training workshops, teacher tours and visits to other schools
· Teachers involvement in day to day activities
· In-service training opportunities for the teachers
· Orientation of new teacher to school and community and helping him in class room environment
· New refresher courses for teacher to gain new experiences for utilizing their skills effectively
· conversion course for the teacher to help him to move on from old course to a new course
· Arrange skill Development program to use computer in classroom and give demonstration and presentation.
· Internal skill development program by arranging audio and video training equipments
· Keep the teacher up to date with global educational changes
· Provide video conference facility to teachers to see the teacher of developed countries in real class room environment


Post Comment

Friday, April 8, 2011

It is 5113 years had elapsed in the Hindu Calendar System - As on 15th April 2011.


The Hindu calendar  begins with Kali Yuga. The epoch (starting point or first day of the zeroth year) of the current era (Kali Yuga) of Hindu Calendar (both solar and lunisolar) is February 18, 3102 BCE in the proleptic Julian calendar or January 23, 3102 BCE in the proleptic Gregorian calendar.  
Both the solar and lunisolar calendars started on this date. After that, each year is labeled by the number of years elapsed since the epoch.
This is a unique feature of the Hindu calendar. All other systems use the current ordinal number of the year as the year label. But just as a person's true age is measured by the number of years that have elapsed starting from the date of the person's birth, the Hindu calendar measures the number of years elapsed.
As of April 15, 2011, 5113 years (3102+2011=5113) had elapsed in the Hindu calendar. However, the lunisolar calendar year usually starts earlier than the solar calendar year,  so the exact year will not begin on the same day every year.

Most of these calendars are inherited from a system first enunciated in Vedanga Jyotisha of Lagadha, a late BCE adjunct to the Vedas, standardized in the Surya Siddhanta (3rd century CE) and subsequently reformed by astronomers such as Aryabhata (499 CE), Varahamihira (6th c. CE), and Bhaskara (12th c. CE). There are differences and regional variations abound in these computations, but the following is a general overview of Hindu lunisolar calendar.
The Hindu New Year's Day commences on the first day of the month called Chaitra or Chithirai. It is also called Chaitra Vishu for this reason. The occasion is said to be an auspicious one because, at this time, the sun enters the sign Aries of· the Zodiac. The people call the occasion Chaitra Vishu Punyakalam or, the sacred occasion.
 
The reason why the people in India compute the Indian year from this month when the sun enters Aries -- the ram in the signs of the Zodiac -- is said to be one philosophically derived from the science of cosmo-genesis. The Sanskrit word for 'ram' is aja which means 'that which is not born.' Therefore the sign of the Zodiac under reference stands for the ultimate cause of everything, and consequently the month in which the sun enters this sign is rightly considered to be the first month of the year. From time immemorial, the Hindu conception of an ideal life has been one of sacrifices and religious observances. Thus the information regarding the appropriate time for the observance of particular rites or ceremonies becomes important. This information is furnished by the Hindu astrologers and astronomers in the form of a calender called panchangams. 

In ancient times books were very rare and even cudjan leaf manuscripts were not easily available to the vast majority of the people of a village; only the chief priest of the village held a copy of the precious manuscript and it was his duty to apprise the people in his village of the date of observance of a particular festival or Vrata. But in the beginning of the year the people desire to know the position of the various planets with reference to the sun and its effects on men, animals and plants. They also want to know whether the position of the planets would bring them rains in the proper seasons. So the custom of calculating and predicting the planetary influence over the earth through such astrological studies came in vogue.
The days are generally hot and sultry in the month of Chithirai. When a large number of people assemble at a particular place in hot weather, something must be done to counter it. Thus arose the custom of presenting people with cool drinks and fans. On this festive day people eat margosa flowers, fried or rather charred and mixed with sugar. Apart from the medicinal effect which this preparation has, we may say that this flower belongs to this season and is thus recognised as the harbinger of the coming season.
Tamilians of southen India arrive at their new year day in accordance with the movement of the sun and it is the astronomical year which marks the vernal equinox. The Telugu and the Kannada-speaking people follow the lunar or the luni-solar systems, which precedes the Tamil new year. The Malayalis of the west coast follow an agricultural year which is known as Kollam Andu, commencing in September when the sun enters the autumnal equinox. It is in this part of the west coast of southern India that very heavy rains fall for nearly nine months in the year.
Though the day commencing each month is considered to be auspicious yet special importance is attached to the occasions, Chaitra Vishu, Tula Ravi, Uttarayana and Dakshinayana. The solar year commences from the sun's entrance into aries -- the ram. The beginnings of the solar months are determined by the entry of the sun into the other zodiacal signs.

Eras


 Hinduism has of four eras or ages, of which we are currently in the last. The four are:

  1. Krita Yuga or Satya Yuga
  2. Treta Yuga
  3. DvÄ para Yuga
  4. Kali Yuga
They are often translated into English as the golden, silver, bronze and Iron Ages. (Yuga means era or age.) The ages see a gradual decline of dharma, wisdom, knowledge, intellectual capability, life span and emotional and physical strength. The epoch provided above is the start of the Kali Yuga. The Kali Yuga is 432,000 years long. The DvÄ para, TretÄ and Krita (Satya) Yuga-s are two, three and four times the length of the Kali Yuga respectively. Thus they together constitute 4,320,000 years. This is called a Chaturyuga.
A thousand and a thousand (i.e. two thousand) chaturyuga-s are said to be one day and night of the creator BrahmÄ . He (the creator) lives for 100 years of 360 such days and at the end, he is said to dissolve, along with his entire Creation, into the Eternal Soul or ParamÄ tman.
A samkhya view of the timespan of a yuga is given by Swami Sri Yukteswar Giri, the guru of Paramahansa Yogananda. This is detailed in his book, The Holy Science. According to this view, one complete yuga cycle is equal to one complete "precession of the equinox", a period of approximately 24,000 years. The ascending phase consists of a 1200 year Kali, 2400 year Dwapara, 3600 year Treta and 4800 year Krita (Satya) yuga. The descending phase reverses this order, thus both ascending and descending phases equal 24,000 years. According to calculations given in the book, the most recent yuga change was in 1699, when the
Earth passed from Kali Yuga (the lowest material age) to DvÄ para Yuga (the second age associated with electrical, atomic and finger forces). We are in an ascending spiral right now, and will pass into the TretÄ Yuga in 4100 CE. According to the book, the motion of the stars moving across the sky (a.k.a.precession) is the observable of the Sun's motion around another star. The quality of human intellect depends on the distance of the Sun and Earth from a certain point in space known as the Grand Center, Magnetic Center or VishṇunÄ bhi (the navel/center of Lord Vishnu) Vishnu. The closer the Sun is to it, the more subtle energy the Solar System receives, and the greater is the level of human spiritual and overall development. As the Sun moves around its companion star, it brings us closer to or drives us farther away from Vishnunabi, resulting in the rising and falling ages here on Earth.
Yukteswar tells us that the calendars of the higher ages were based on the Yugas, with each era named after its Yuga. Hence, the year 3000 BCE was known as descending Dwapara 102 (because the last descending Dwapara yuga began 102 years earlier in 3102 BCE). He stated that this method was used up until the recent Dark Ages, when knowledge of the connection with the yugas and the precession cycle was lost; "The mistake crept into the almanacs for the first time during the reign of Raja Parikshit, just after the completion of the last descending Dwapara Yuga. At that time Maharaja Yudhisthira, noticing the appearance of the dark Kali Yuga, made over his throne to his grandson, the said Raja Parikshit. Maharaja Yudhisthira, together with all the wise men of his court, retired to the Himalaya Mountains... thus there was no one who could understand the principle of correctly calculating the ages of the several Yugas".
Thus, Yukeswar assumed that Raja Parikshit was not trained in any vedic principles even though he alone ruled the world many years. Thus, he interpreted that Yugas are not calculated correctly. Consequently, he gave the theory that when the Dwapara was over and the Kali era began no one knew enough to restart the calendar count. They knew they were in a Kali Yuga (which is why the old Hindu calendar now begins with K.Y.) but the beginning of this calendar (which in 2011 stands at 5113) can still be traced to 3102 BCE, (3102+2011=5113) the start of the last descending Dwapara Yuga. To this day there is still much confusion why the Kali starts at this date or what the correct length of the Yugas should be. Yukteswar suggests that a return to basing the Yuga calendar on the motion of the equinox would be a positive step.
The solar years are recorded in the era of the Kaliyuga. Its years are converted into those of the Christian era by subtracting 3101, from the number of complete years that have lapsed since the beginning of the Kaliyuga. Similarly, the corresponding complete year of the Kaliyuga passed, is arrived at by adding 3101 to the Christian year. Further, by adding 3044 to the year in the Vikrama era and 3179 to the year in the Saka era the corresponding Kaliyuga year is arrived at. The lunar month Chandrayanam as opposed to the solar one Sourayanam is reckoned from the full moon to the full moon. It is invariably determined by the beginning of the bright fortnight of the month, but takes the name of the solar month in which the full moon occurs. Each month consists of two halves called 'pakshas' and each half is a fortnight in the month. The Sukla paksha or the bright fortnight is the period of the waxing moon while Krishna paksha or the dark fortnight is that of the waning moon. Each of these pakshas again consists of fifteen tithis. A tithi is the time required by the moon to increase its distance from the sun westward by twelve degrees of the zodiac.
As the true motions of the sun and the moon vary with their positions in their orbits the length or duration of a tithi is also variable. There are names given to these tithis of the fortnight and the fifteenth tithi of the bright fortnight is called the Purnamlisi tithi or the full moon, while the fifteenth tithi of the dark fortnight goes by the name Amavasya tithi or the new moon. In fact, the full moon and the new moon mark the end bright and dark fortnights of the month respectively.
It is also said that the Chaitra Vishu day or the opening day of the first fortnight of the waxing moon was the occasion chosen by Brahma to create this world. Hence this day is also known as yugadhi or the beginning of a yuga. This festive day is said to have acquired further importance by the fact that Sri Ramachandra, the hero of the epic Ramayana, had his triumphal entry into Ayodhya after the destruction of the rakshasas, and was crowned there on this day.
The Indian calendar is named panchangam since it is comprised of five limbs, and they are (1) the tithi, (2) the varam, (3) the nakshatram, (4) the yogam and (5) the karanam. A man desiring prosperity pays attention to the tithi. One desirous of long life understands everything about varam or the days of the week. The nakshatrams are resorted to, for expiating sin and the yogam for obtaining immunity from diseases. The karanam is said to secure success for the observer in all his undertakings. Thus, a proper understanding of planetary influences is essential for controlling them. Hence has arisen the proverb 'wise Inen rule the stars'.
There is also an allegorical myth regarding the origin of the Hindu cycle of sixty years.
Here is the list of the sixty years in the lunar years cycle.
Prabhav, Vibhav, Shukla, Paramoda, Prajapati, Angira, Shrimukha, Bhava, Yuva, Dhatu, Ishwar, Bahudanya, Pramathi, Vikrama, Vrisha, Chitrabhanu, Subhanu, Taran, Prartiva, Vyaya, Sarvajit, Sarvadhari, Virodhi, Vikriti, Khara, Nandana, Vijaya, Jaya, Marmath, Durmikha, Hemalambi, Vilambi, Vikari, Sharvar, Plava, Shubakrit, Shobhana, Krodhi, Vishvavasu, Parabhava, Plavanga, Kilaka, Saumya, Sadharana, Virodhikrita, Paridhavi, Pramadi, Ananda, Rakshasa, Nala, Pingala. Kalayukta, Sitdharti, Raudri, Durmati, Dundubhi, Rudhirodgari, Raktakshi, Krodhana, and Akshaya.

Post Comment

Wednesday, April 6, 2011

Tuesday, April 5, 2011

தமிழ்மொழிப்பாட வகுப்புகளில் படிநிலை வளர்ச்சிகள்உலகில் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது; கற்பிக்கப்படுகிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் கற்பித்தல் முறை ஒன்று போல் இல்லை. நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம், ஆசிரியருக்கு ஆசிரியருக்கு இம்மொழிக் கற்பித்தல் வேறுபடுகிறது. அவ்வகையில் எத்தனையோ அணுகுமுறைகளின் அடிப்படையில் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டாலும் கற்பிக்கும் முறையில் இருக்கும் அணுகுமுறைகளுக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் திறன்கள் வேறுபடுகின்றன. இதனை ஆய்வுமுறையில் ஆராய்ந்து கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளவர்கள் வெகு சிலரே. வகுப்பறையில் கற்பிக்கும் கூறுகளை எத்தனையோ விதமாக ஆய்வு செய்யலாம்; இருப்பினும் நாம் இங்குப் பார்க்க இருப்பது ஆசிரியர் கற்பிக்கும்போது படிநிலை வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகு கற்றல் கற்பித்தல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையே ஆகும்.

படிநிலை வளர்ச்சி என்றால், வகுப்பறையில் கற்றல் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் கற்பித்தல் முறைகளில் ஒரு குறிப்பிட்ட கால அளவு நடைபெறும் ஒரு நடவடிக்கை. அதாவது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையிலிருந்து மற்றொரு நடவடிக்கைக்கு மாறுதல் ஆகும். இத்தகைய பல நடவடிக்கைகள் சேர்ந்ததுதான் ஒரு பாடம். பல பாடங்கள் சேர்ந்து அமைவதுதான் ஒரு கருப்பொருளை ஒட்டிய ஒரு தொகுதி. கற்றல் கற்பித்தலில் முக்கியமானதாகக் கருப்படும் இந்த படிநிலை வளர்ச்சி ஏன் வகுப்பறைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் கற்றல் கற்பித்தல் சுமூகமாக நடைபெறுவதற்கே ஆகும்.

ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகின்றபோது பத்து விதமான படிநிலை வளர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்று பேராசிரியர்கள் Luke, Freebody, Cazden, Lin ஆகியோர் கூறுகின்றனர். இவர்கள் பல ஆய்வாளர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு பல வகுப்புகளை நேரிடையாகப் பார்த்து இந்த பத்து முறைகளை உருவாக்கியுள்ளனர். பத்து வகை படிநிலை வளர்ச்சிகள் வருமாறு.

1. ஆசிரியரின் விரிவுரை (தான் பாட்டில் பேசிக்கொண்டு போகும் போக்கில் அமைந்த விரிவுரை) {Whole Class Lecture (Monologues)}

ஆசிரியர் தான்பாட்டில் பாடம் நடத்திக்கொண்டு போவது. மாணவர்களோடு எவ்விதமான கலந்துரையாடலிலும் ஈடுபடுவதோ கலந்துரையாடல் வளர்வதற்கு இடம் கொடுப்பதோ கிடையாது. கிட்டதட்ட ஆசிரியரே பேசிக்கொண்டு போகும் போக்கு. மாணவர்களின் புரிந்துணர்வுக்காகவோ வினாக்களுக்காகவோ பதில்களுக்காகவோ காத்திராமல் பாடத்தை நடத்திக்கொண்டு போகும் நிலை. 
2. வகுப்பறை கலந்துரையாடல் (Whole Class Elicitation and Discussion) 

ஆசிரியர் மாணவர்களிடம் கீழ்நிலை மேல்நிலை வினாக்களைக் கேட்டல்; மாணவர்கள் நீண்டநேரம் பேச அனுமதித்தல்; பல்வேறு நிலைகளில் மாணவர்கள் உரையாட வாய்ப்பளித்தல்; மாணவர்கள் பேசுவதை வெண்பலகையிலோ வேறு குறிப்புகளின் வழியோ பதிவு செய்தல்; எவ்வித தடையும் இல்லாத உரையாடலுக்கு வழிவிடுதல்; மாணவர்கள் தங்களுக்கிடையே உரையாடலை வளர்த்துக்கொள்ளல்; அதற்கேற்பக் கருத்துகளைக் கூறுதல்; ஆசிரியர் சில வினாக்களின் வழி உரையாடலைத் திசை திருப்புதல்.

3. கேள்வி கேட்டு விடைகளைச் சரிபார்த்தல் {Whole Class Answer Checking (Initiate, Response, Evaluate)}

ஆசிரியர் கேள்வி கேட்டல், மாணவர்கள் பதில் கூறுதல், சரிபார்த்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர் தொடர்ச்சியாகப் பல வினாக்களைக் கேட்டு மாணவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பதிலைப் பெறுதல்.

4. ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து திரும்பத் திரும்பக் கூறுதல், அல்லது சேர்ந்து படித்தல் (Choral Repetition and / or Oral reading) 

ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து திரும்பத் திரும்பக் கூறுதல், அல்லது சேர்ந்து படித்தல், பாடுதல், சேர்ந்து பதில் கூறுதல், உரக்கச் சத்தமாகப் படித்தல்


5. தனி வேலை (Individual seatwork)

மாணவர்கள் தாங்கள் சொந்தமாக வேலையைச் செய்தல். எடுத்துக்காட்டுக்கு மெளனமாக வாசித்தல், கட்டுரை அல்லது கருத்தறிதல் பகுதியைச் செய்தல்
6. சிறு குழு வேலை (Small group Work)

மாணவர்கள் சிறு சிறு குழுவாக இருந்து வேலை செய்தல். எடுத்துக்காட்டாக கட்டுரை, கருத்தறிதல் செய்யக் கருத்துகளைத் தயாரித்தல், மொழிப்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

7. சிறு தேர்வு (Test taking)

மாணவர்கள் வகுப்புத் தேர்வு அல்லது தேர்வு எழுதுதல்

8. ஒட்டுமொத்த வகுப்பறை நடவடிக்கைகள் அல்லது விளக்கக் காட்சிகள்
(Whole Class Demonstration or Activity)


வகுப்பறையில் நடைபெறும் ஒரு விளையாட்டை ஆசிரியர் வழிநடத்துதல்; அல்லது விளையாட்டு நடைபெறத் தூண்டுதல்; ஒரு விளையாட்டை விளையாடிக் காட்டல்; அறிவியல் சோதனைகளைகச் செய்து காட்டல்; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களை ஈடுபடுத்திக் காட்டல். உதாரணமாக ஆசிரியர் மாணவர்களை குழு குழுவாகப் பாகம் ஏற்று நடித்துக் காட்டக் கூறுதல், குழுவாகக் கதை கூறச் சொல்லுதல், வகுப்பு முழுவதையும் வாசித்தல், பாடுதல், முதலிய பல நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்.
9. மாணவர்கள் படைத்தல் (student demonstrations / presentations)

மாணவர்கள் திரும்பத் திரும்பக் கூறுதல்; வெண்பலகையில் எழுதிக்காட்டல்; எழுதியதை வைத்துப் பேசுதல்; மாணவர்கள் தாங்கள் எழுதியதை ஒளி ஊடுருவிக் கருவியின் மூலம் படைத்தல்; அனுபவத்தின் மூலம் படைத்தல். வாசித்தல், பாடுதல், கதை கூறுதல், பாகம் ஏற்று நடித்தல், 

10. சோதனைக்கூடச் சோதைனை முறை/ செய்முறை விளக்கம் (Laboratory/ Hands-on Experiments) 

மேற்கண்ட பத்துவகையான படிநிலை வளர்ச்சிகளும் தமிழ் வகுப்புகளில் எவ்வாறு இடம்பெறுகின்ற என்பதைக் கண்டறியும் பொருட்டுப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வகுப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது. வெவ்வேறு ஆசிரியர்க்ள நடத்திய 21 தொகுதிகள் அடங்கிய 81 வகுப்புகள் ஆய்வுக்கு உட்பட்டன. இந்த 81 வகுப்புகளில் மொத்தமாக 357 படிநிலை வளர்ச்சிகள் இடம்பெற்றன. இவற்றுள் சோதனைக்கூடச் சோதனைமுறைகளைத் தவிர்த்த ஏனைய ஒன்பது படிநிலை வளர்ச்சிகளும் இடம்பெற்றன. அவை
Whole Class Answer Checking (IRE) 25.1 % Whole class Elicitation and discussion 17.7 % Small group work 16.4 % Individual seatwork-14.1 % Whole Class Lecture (Monologues) 9.9 % Student demonstration/presentation-8.4 % Choral Repetition and / or Oral reading-4.3 % Whole class demonstration or Activity-3.1 % Test taking 1.0 %
இருப்பினும் அதிகமாக இடம்பெற்ற படிநிலை வளர்ச்சிகள் மூன்றே.

பொதுவாகத் தமிழ் வகுப்புகளில் படிநிலை வளர்ச்சிகள் படிப் படியாக இடம்பெற்றுள்ளதையும் பலவகையான படிநிலை வளர்ச்சிகள் விரவி வந்துள்ளதையும் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாகப் புராணக்கதைகள் என்னும் தலைப்பில் அமைந்த பாடத்தில் முதலில் மெளன வாசிப்பும் (individual seatwork) தொடர்ந்து உரக்க வாசித்தலும் (Oral Reading) இடம்பெற்றன. அவற்றைத் தொடர்ந்து பனுவலைப் பற்றிய விளக்கமும் கருத்தறிதல் வினாக்களுக்குரிய விளக்கமும் (IRE) இடம்பெற்றன. தொடர்ந்து பனுவலைப் பற்றிய கலந்துரையாடலும் (Elicitation and discussion) பின்பு பனுவலைப் போல் வேறு ஒரு கதை உருவாக்கமும் (Individual seatwork) இடம்பெற்றன. இவ்வாறு இந்தப் பாடத்தில் ஐந்து படிநிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு படிநிலைகளும் எத்தனை நிமிடங்கள் இடம்பெற்றுள்ளன என்று கணக்கிடப்பெற்றுக் குறிப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. காரண காரியங்களோடு வளரச்சி அடையும் படிநிலைகள்


தமிழ்பாட வகுப்புகளில் ஒரு படிநிலை வளர்ச்சிக்கும் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு ஏற்புடையதாகக் காரண காரியங்களோடு தொடர்புடையதாக அமைந்துள்ளன. அதனோடு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகளும் காரண காரியங்களுக்கு உட்பட்டே அமைகின்றன. எடுத்துக்காட்டுக்குச் சிங்கப்பூர் வரலாறு என்னும் பாடத்தில் முதலில் மெளன வாசிப்பும் தொடர்ந்து உரக்க வாசித்தலும் அடுத்துப் பாடத்தைப் பற்றிய விளக்கம் இடம்பெற்றன. தொடர்ந்து கருத்தறிதல் வினாக்களுக்கு விடைகள் கண்டறியப்பெற்றன. அதனைத் தொடர்ந்து இலக்கணக் கூறுகளும் பாடக் கருப்பொருளின் அடிப்படையில் பயிற்சியும் இடம்பெற்றன. இவை அனைத்தும் கருப்பொருள் அடிப்படையில் அமைந்திருந்தன.
மோசமான படிநிலை வளர்ச்சியில் அமைந்த ஒரு பாடம்.

ஒரு நல்ல படிநிலை வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் எந்தெந்தத் தவறான கூறுகள் அவற்றில் இடம்பெறக் கூடாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

விழாக்கள் என்னும் தலைப்பில் அமைந்த ஒரு பாடம். விழாக்கள் என்னும் தலைப்பில் அமைந்த ஒரு கருத்தறிதல் பகுதியை ஆசிரியர் முதலில் நடத்தினார். தொடர்ந்து விழாக்காலங்களில் அணியப்படும் ஆடைகளைப் பற்றி ஆசிரியர் விளக்கம் கொடுத்தார். அடுத்த வகுப்பில் ஆசிரியர் எழுவாய் பயனிலை செயப்படுப்பொருள் பாடம் நடத்தினார். இந்த இலக்கணப்பாடம் கருப்பொருளை ஒட்டி அமையாததோடு முதல் நாள் நடத்திய விழாக்கால ஆடைகளோடும் தொடர்புடையதாக அமையவில்லை. வகுப்பு முடியப் பத்து நிமிடங்கள் இருக்கின்ற வேளையில் ஆசிரியர் சிங்கப்பூரில் கொண்டாடப்படும் விழாக்கள் தொடர்பாகப் பேசச் சொன்னார். இத்தகு படிநிலை வளர்ச்சிகள் கருப்பொருளின் அடிப்படையில் பார்க்கும்போது காரண காரியங்களோடு தொடர்புடையதாக அமையவில்லை. 

தொடர்பற்ற படிநிலை வளர்ச்சிகளால் ஏற்படும் சிக்கல்கள் 


தயார்நிலையில் வரச்சொன்ன தலைப்பை ஒட்டித்தான் பாடம் நடத்துவார் என்னும் எண்ணத்தில் வந்த மாணவர்களின் எதிர்பார்ப்புகள் பொய்யாக்கப்படுகின்றன. அவர்களுடைய ஆர்வம் இதனால் சிதைகிறது. அதோடு மாணவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், போதுமான நேரம் இல்லாதபோது தயார் நிலையில் வரச்சொன்னத் தலைப்புத் தொடர்பாகப் பாடத்தை ஆசிரியர் தொடர்கின்றார். இதனால் மாணவர்கள் முழுமையாக அப்பாடத்தில் இடம்பெற இயலாமல் போய்விடுகின்றது. மேலும் பாடத்திலும் ஆர்வம் குறைகின்றது. மாணவர்கள் தயாரித்து வந்த செய்திகளை வகுப்பறையில் முறையாகப் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. ஆசிரியரும் அவற்றை முறையாக ஏற்றுப் பாரட்டவில்லை. இதனால் மாணவர்கள் கற்றலில் ஊக்கம் இழக்கின்றனர். 


படிநிலை வளர்ச்சிகளின் கால அளவு

ஆய்வுக்குட்பட்ட பாடங்களில் காணப்பட்ட 357 படிநிலைகளில் 123 படிநிலைகள் ஐந்து நிமிடமோ அதற்குக் குறைவாகவோ அமைந்துள்ளன. குறிப்பாகத் “தனி வேலை” என்னும் படிநிலையில் 33.4% அளவு ஐந்து நிமிடங்களோ அதற்குக் குறைவாகவோ அமைந்துள்ளது. 35.3% அளவு ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள்ளாக அமைந்துள்ளது. “சிறு குழுவேலை” என்னும் படிநிலைவளர்ச்சி 27.8% ஐந்து நிமிடங்கள் அதற்குக் குறைவாகவும் 46.4 % ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவும் அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டிற்கு (படிநிலை வளர்ச்சி காரண காரியத் தொடர்போடு அமைந்திருந்தாலும்) ஒருநிலையிலிருந்து அடுத்த நிலைக்குத் துரிதமாகச் செல்லும் நிலை பின்வருமாறு உள்ளது.
பாடத்தலைப்பு உறவுகள்.


படி 1

ஆசிரியர் மாணவர்களைக் குழுக்களாகப் பிரிந்துக்கொண்டு பாடத்தில் உள்ள படத்தைப் பற்றிக் கலந்துரையாடச் சொல்லல் (5 நிமிடங்கள்)

படி2.

ஒவ்வொரு குழுவும் படங்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை வகுப்பறையில் படைத்துக் காட்டுதல் (5 நிமிடங்கள்)
படி3.

ஆசிரியர் படங்களைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுதல். அதே வேளையில் மாணவர்களை வகுப்பின் முன்வந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிப் படத்தை ஒட்டிப் பேசச் சொல்லுதல் (5 நிமிடங்கள்)
இங்கு மூன்று நிமிடங்களில் மாணவர்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு சம்பவத்தை ஆசிரியர் பேசச் சொல்லுகிறார்.

இவ்வாறு படிநிலை வளர்ச்சிகள் ஒரு படிநிலையிலிருந்து அடுத்த படிநிலைக்கு மிக விரைவாகப் போகும் போக்கினைக் காட்டுகிறது. இந்நிலையினால் மாணவர்கள் தாங்கள் ஒருநிலையில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது இருக்கும்போது அடுத்த நிலைக்கு வெகு விரைவாகப் போகத் தள்ளப்படுகிறார்கள். மேலும் தாங்கள் எந்தப் படிநிலையில் அல்லது எந்தச் செயலில் ஈடுபட்டு இருந்தார்களோ அதனைச் சரிவரச் செய்துமுடிக்க முடியாமலும் புரிந்துகொள்ள முடியாமலும் போகிறார்கள் என்பதை ஆய்வு காட்டுகிறது. ஓரு சீரான கற்றலுக்கு இது இடையூறாக அமைந்து விடுகிறது. சிங்கப்பூர்ச் சூழலில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வெறும் கருத்துகளை மட்டும் அறிவு பெறுவதற்காகக் கூறிக்கொண்டு போகுதல் சரியல்ல. மாணவர்களின் மொழி வளர்ச்சி அடையவும் நேரம் கொடுத்துக் கற்பிக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் பேச எழுத அவர்களுக்குப் போதிய நேரம் அவசியமாகும்.

இவ்வாறு ஆசிரியர்கள் விரைவாகப் பாடத்தை நடத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வகுப்பைக் காலதாமதமாக ஆரம்பித்து முன்னதாகவே முடிக்க வேண்டிய சூழல். அனைத்துத் தமிழ் மாணவர்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக வந்து சேராமல் ஒருவர் இருவராக வகுப்பிற்கு வருதல். பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கவேண்டிய கட்டாயம். கணினி இணைப்புக் கிடைப்பதில் ஏற்படக்கூடிய காலதாமதம். மாணவர்களின் மெத்தனப்போக்கு.

தமிழ் வகுப்புகளில் இடம்பெறும் படிநிலை வளர்ச்சிகளைப் பார்க்கும்போது தமிழாசிரியர்கள் மூன்று வகையான படிநிலை வளர்ச்சிகளை அதிகமாகக் கையாளுவதைப் பார்க்க முடிகிறது. அவை
Whole Class Answer Checking (IRE) 25.1 % Small group work 16.4 % Whole class Elicitation and discussion 17.7 % 

1. Whole Class Answer Checking (IRE) 25.1%
தமிழாசிரியர்களிடையே பிரபலமாக இருக்கும் படிநிலை இது. அதாவது மொத்தம் 357 படிநிலை வளர்ச்சிகளில் 90 முறை (25.1%) இது தமிழாசிரியர்களால் கையாளப்பட்டுள்ளது. இருப்பினும் அனேக நேரங்களில் இப்படிநிலை வளர்ச்சி சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.

ஆசிரியர் மாணவர்களிடம் வினாக்களைக் கேட்கின்ற பொழுதும் மாணவர்கள் பதில் கூற முயற்சி செய்கின்ற பொழுதும் ஆசிரியர் போதுமான நேரம் மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆசிரியர் தொடர்ச்சியாகப் பல வினாக்களைக் கேட்டு விடைகளை மாணவரிடமிருந்து பெற முயற்சி செய்தாலும் போதுமான நேரம் கொடுக்காததினால் மாணவர்கள் விடை கூற இயலாது போய்விடுகிறது. மாணவர்கள் பதில் கூறச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பொழுதே ஆசிரியர் விடைகளைத் தாமே கூறிவிடுகின்றார். அல்லது வேறொரு மாணவர்க்கு அந்த வாய்ப்பினை வழங்கிவிடுகின்றார். இதனால் பின்தங்கிய மாணவனுக்குப் பதிலளிக்க வாய்பில்லாமல் செய்து விடுகின்றார்; அல்லது மீண்டும் மீண்டும் கெட்டிக்கார மாணவனுக்கே அந்த வாய்ப்பினை வழங்கி அவனிடமிருந்து மட்டுமே பதிலைப் பெறுகிறார். இதனால் வகுப்பறையில் சராசரி அல்லது சராசரிக்குக் கீழ் உள்ள மாணவர்கள் பாடங்களில் முழுமையாகப் பங்குகொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.

2. Whole Class elicitation and discussion 17.7%

தமிழாசிரியர்கள் மத்தியில் அடுத்த நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படிநிலை “வகுப்பறை கலந்துரையாடல்”. ஆய்வுக்குட்பட்ட பகுதியைப் பார்க்கும்போது இந்தப் படிநிலை வளர்ச்சி 63 (17.7%) முறை இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் மாணவர்களிடம் வினாக்களைக் கேட்கின்ற பொழுது அவற்றுள் 68 விழுக்காட்டு வினாக்கள் கீழ்நிலை வினாக்களாக அமைகின்றன. 32 விழுக்காட்டு அளவு மேல்நிலை வினாக்களாக இருந்தாலும் பதில் கூறும் மாணவர்களுள் 61.3 விழுக்காட்டினர் மிகச் சுருக்கமாக ஓரிரு சொற்களில் தங்கள் பதில்களைத் தருகின்றனர்; அல்லது பதிலே கூறமால் இருந்து விடுகின்றனர். இப்படி மேல் நிலை வினாக்கள் கேட்காததினாலும் பதில்கள் விரிவாக இல்லாததினாலும் வகுப்பறையில் கலந்துரையாடல்கள் நிகழ்வது குறைந்து காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வகுப்பறை ஆசிரிரியர் மையமாகவே (Teacher Centered) விளங்குகிறது. மாணவர்கள் மையமாக (Student Centered) விளங்கவில்லை.

பொதுவாக ஆசிரியர்களால் கீழ்நிலை வினாக்கள் கேட்கப்படுகின்றதனாலும் மேல்நிலை வினாக்களில் மாணவர்கள் அதிக ஈடுபாடு காட்டாததினாலும் வகுப்பறையில் கலந்துரையாடல் அதிகம் நடைபெறவில்லை. இதற்கு மாணவர்களுக்கு விடை தெரியாதது மட்டும் ஒரு காரணம் அல்ல. மாணவர்கள் தமிழ் மொழியைத் தைரியமாகப் பேச முன்வராததும் ஒரு காரணமாகும். மாணவர்களிடம் மொழி வளம் இல்லாததும், தன்னம்பிக்கை இல்லாததும் மேலும் சில காரணங்களாக அமைகின்றன. அடுத்துத் தொடர்ச்சியாகத் தமிழில் பேச அவர்களால் இயலவில்லை அல்லது விரும்பவில்லை.

சிற்சில இடங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை அல்லது தமிழ்ச்சொற்கள் தெரியாதபொழுது ஆங்கிலச்சொற்கள் கலந்து பேசுவதை ஆசிரியர் அனுமதித்தால் இந்த உரையாடல் நீள வாய்ப்பு உள்ளது. அதற்காக ஆங்கிலம் கலந்து பேசுவதை முழுமையாக அனுமதிக்கக் கூடாது. இடம் பொருள் ஏவல் அறிந்து கொடுக்கப்படும் தலைப்பு எதைப் பற்றியது என்பதை அறிந்து ஆசிரியர் இதனை முடிவு செய்தல் வேண்டும். இது தமிழ் பேசாது இருக்கும் மாணவர்களுக்குக் குறைந்த பட்சம் ஆங்கிலம் கலந்தாவது தமிழ் பேச வாய்ப்பு அளிக்கும். 


3. Small group work 16.4%

ஆய்வுக்குட்பட்ட பகுதியைப் பார்க்கும்போது இந்தக் “குழுவேலை” படிநிலை 59 (16.4%) முறை இடம்பெற்று மூன்றாம் நிலையில் உள்ளது. இருப்பினும் இப்படிநிலை வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும் அளவு திறமையாகக் கையாளப்படவில்லை.

குழு நிலை வளர்ச்சியில் பல்வேறு கூறுகளில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழுவில் அனைத்துத் தர நிலையிலும் உள்ள மாணவர்கள் இடம்பெற வேண்டும். அதாவது கெட்டிக்கார மாணவர்கள் சராசரி மாணவர்கள் சராசரிக்குக கீழ் உள்ள மாணவர்கள் என்று அமைய வேண்டும். கெட்டிக்கார மாணவர்களை ஒரு குழுவிலும் பின்தங்கிய மாணவர்களை ஒரு குழுவிலும் அமைப்பது சரியல்ல. அடுத்து ஒவ்வொரு குழுவிலும் சுமார் மூன்றிலிருந்து ஐந்து எண்ணிக்கைகளுள் மாணவர்கள் இடம்பெறுவது நல்லது. இது மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.

குழுக்கள் அமர்ந்து நடவடிக்கைகளில் ஈடும்படும்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ளத்தக்க வகையில் அமர்தல் வேண்டும். அதற்கு ஏற்றார்போல் நாற்காலிகளை நகர்த்திக் கொள்ளவது அவசியம். குழு வேலைகளுக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நேரம் ஓதுக்குதல் வேண்டும்.
மேலும் குழுவிலிருந்து ஓரிரு மாணவர்களையே மீண்டும் மீண்டும் கூப்பிட்டுக் குழு வேலை தொடர்பான செயல்களைச் செய்யச் சொல்லக்கூடாது. குழுவில் அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் சரிவர அமைவதல் வேண்டும். ஓரிரு மாணவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மீதமுள்ள மாணவர்கள் பங்கெடுக்காமல் இருப்பது சரியல்ல.

மேற்கண்ட கூறுகளைக் கவனத்தில்கொண்டு ஆய்வின் முடிவுகளைப் பார்க்கும்போது குழு நிலை படிவளர்ச்சியில் 31 விழுக்காட்டு அளவு மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து அமராமல் வரிசை வரிசையாக (2-3) அமர்ந்த நிலையிலேயே தங்கள் குழு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குழுவிலுள்ள மாணவர்களின் பங்களிப்புச் சரிசமமாக இருக்க வாய்ப்பில்லாமல் போயுள்ளது. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் போதுமான இட வசதி இருந்தும் குழு உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி சரிவர அமரவில்லை. இதனால் கூடிக்கற்றல் என்னும் அணுகுமுறை இவ்வகுப்புகளில் சரிவரப் பயன்படாமல் போயுள்ளது. குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுத்துப் படைக்க வேண்டும் என்னும் நிலை இருந்தும் ஒவ்வொரு குழுவிலும் ஓரிருவர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். 

முடிவுரை

காரண காரிய முறையில் படிநிலை வளர்ச்சிகளை அமைத்தல் வேண்டும். படிநிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு நேரம் கொடுத்தல் வேண்டும். சிறு குழு வேலையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும்படி செய்தல் வேண்டும். குழுவாக அமர்ந்து பேசுவதற்கு ஏற்ப இருக்கைகளை மாற்றி அமைத்தல் வேண்டும். அறிவு வளர்ச்சியை மட்டும் நோக்கிப் பாடம் நடத்தாமல் மாணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் நேரம் ஒதுக்கிக் கற்பித்தல் வேண்டும்.

கற்பித்தல் என்பது ஒரு கலை அது பயிற்சியின் மூலமே செம்மையடைகின்றது. எனவே ஆசிரியர்கள் திட்டமிட்டு மாணவர்களின் நிலை உணர்ந்து கற்பிக்கும்போது சிறப்பான கற்றல் கற்பித்தல் நிகழ வாய்ப்பு உள்ளது.தமிழ்மொழிப்பாட வகுப்புகளில் படிநிலை வளர்ச்சிகள்Instructional Phases in Tamil Language Classrooms
கட்டுரையாளர்கள்
டாக்டர் ஆ ரா சிவகுமாரன்
துணைப் பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறை
தேசியக் கல்விக் கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்

செல்வி அ சங்கீதா
ஆய்வு உதவியாளர்
ஆசிரியவியல் மற்றும் பயிற்சி குறித்த ஆய்வு மையம்
தேசியக் கல்விக் கழகம்


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...