Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Friday, April 22, 2011

திறமைசாலியாக வளர்வது எப்படி?“எண்ணியவன் உறங்களாம்
எண்ணங்கள் உறங்குவதில்லை” -வேதாத்திரி மகிரிஷி
மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்ன?
ஏழைக்கு என்னென்ன தேவைகள்?
வாழ்க்கைக்கான வசதிகள் இருந்தும் ஏன் சிலருக்கு மனதிருப்தி இல்லை?
மனத்தின் ஏக்கங்கள் என்னென்ன?
பணம் நிறைய கிடைத்தாலும் சில வேலைகளை விரும்புவதில்லை ஏன்?
இக்கேள்விகளுக்கான பதில்களுக்கு வருமுன் ஒரு சரித்திர நிகழ்வைப் பார்ப்போம்.
சரித்திர நிகழ்வு :
அதிகாலை செய்தித் தாளைப் புரட்டினார் அந்த மாபெரும் விஞ்ஞானி. “மரண வியாபாரி மரணம்” என்று தலைப் பிட்டு அதன்கீழே அவருடைய போட்டோவைப் பார்த்தார். மனதில் அதிர்ச்சி.
நான் இறந்துவிட்டால் இப்படித்தான் உலகம் என்னைப் பற்றி பேசுமா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. இனி தன் பெயரை எப்படி பேச வேண்டும் என்ற புதிய முடிவை எடுத்தார். இன்றும் உலகத்திலேயே உயர்ந்த பரிசான நோபல்பரிசை உருவாக்கிய விஞ்ஞானி ஆல்பர்ட் நோபல்தான் அவர்.
வேறொருவர் இறந்தபோது இவர் என எண்ணி தவறான மரண செய்தியை செய்தித்தாள் வெளி யிட்டதால் வந்த மனத்திருப்பம்.
வெடி மருந்ததைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் சாதனைப் படைத்தார். அதன் மறுபக்கம், வெடிமருந்தால் எண்ணற்றகொலைகள் ஆல்பர்ட் நோபலின் உடன்பிறந்த சகோதரும் அவ்வெடிக்குப் பலி.
அதற்கு மனதில் நொந்துக் கொண்டிருந்த ஆல்பர்ட் நோபலுக்கு ‘மரணவியாபாரி மரணம்’ என்ற பட்டத்தைப் பார்த்ததும் மனதில்தோன்றிய இறுதி லட்சிய தேவைக்காக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் தானமாக வழங்கி “இந்த உலகத்தின் அமைதி, வளர்ச்சிக் காக யார் யார் பயன் படுகிறார் களோ அவர்களுக்கு நோபல் பரிசு வழங்குங்கள்” என்று அறிவித்தார்.
நோபல் பரிசு விஞ்ஞானியின் இறுதி லட்சியம், ஏழைகளின் தேவைகள், மனதிருப்தியின்மை, மனிதனின் ஏக்கங்கள், போன்றவற்றை மனயியலின் அடிப்படையில் பொருளாதார நிபுணர் மாஸ்லோ விளக்குகிறார்.
மாஸ்லோ விதிகள்:
வயிற்றுப்பசி தீராத மனிதனுக்கு மூன்று வேளை சாப்பாடு என்ற தேவை.
2. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை என்று அடைந்தவுடன் இதெல்லாம் நிலையா என்பதற்கு தேவையான உத்திரவாதம் என்ற பாதுகாப்பு தேவை.
3. அப்படியே பாதுகாப்பு தேவை நிறைவேறிவிட்டாலும் அடுத்ததாக நமது அன்பை, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்பவர் யார் என்ற ஏக்கத்தில் பிறக்கும் அன்பு தேவை.
4. உறவுகள், நண்பர்கள் என வளர்ந்து அன்பு வட்டம் வந்துவிட்டால் அதன் பின் சமுதாயத்தில் தான் உயர்ந்தவன் என்று மற்றவர் பாராட்ட வேண்டும் என்ற மரியாதை தேவை.
5. உயர்ந்த அந்தஸ்துடன் மரியாதை களுடன் வாழ்கின்ற மனிதனுக்கும் தன்னுடைய தனித்தன்மை என்ன? தன்னைப் பற்றி இந்த உலகம் எப்படி பேசவேண்டும் என்ற தனித்தன்மை தேவை.
இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் உள் உணர்வுகளைத் தூண்டி அதன் விளைவாக அவன்தன் வாழ்வின் இலட்சியத்தை அடைய உதவுவதுதான் மேலாண்மையின் அடிப்படை.
ஒரு தேவை நிறை வேறிய பின்னர் அடுத்த தேவையை நாடுவதுதான் மனித இயல்பு. அந்த தேவைகளின் அடிப்படையில் ஒரு மனிதனுக்குத் தகுந்த இலக்கைக் கொடுத்தால் அவன் மேலும் உற்சாகமாக செயல்படுவான்.
அதன்மூலம் அவன் வாழ்வும் உயரும். அந்த நிர்வாகமும் வளரும்.
இதைத்தான் திருவள்ளுவர் செயலின் தன்மை, செய்யும்முறை, செய்பவரின் திறன் இவற்றை இணைத்து ஆராய்ந்து எந்த செயலுக்கு யார் பொருத்தம் என்பதை அறிந்து அவரிடம் விடுவதே சிறந்த மேலாண்மை என்றார்.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்”
– திருக்குறள்.

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...